Love Today Hindi remake produced by Phantom Films

Advertisment

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்தை 'ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்' தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கைப்போடு போட்டது. மேலும் 100 நாள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. அண்மையில் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கி 100வது நாள் விழாவை படக்குழு கொண்டாடியது.

இதனிடையே தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து ஜோண்டு வந்த நிலையில் போனி கபூர் தயாரிப்பதாக தகவல் வெளியானது. அதனை மறுக்கும் வகையில் போனி கபூர் இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என விளக்கமளித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனம் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.