Advertisment

"அவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன்" - லவ் டுடே பட இயக்குநர்

love today director pradeep ranganathan thanked director balasekaran

Advertisment

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன்,அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் ரூ.60கோடியைத் தாண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் ரஜினி, சிம்பு, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்தனர்.தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அங்கேயும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்து வருவதாகக்கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லவ் டுடே என்ற தலைப்பை உருவாக்கிய முதல் நபருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள். தலைப்பிற்கு நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இயக்குநர் பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில்1997ஆம் ஆண்டு வெளியானது 'லவ் டுடே' படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Pradeep Ranganathan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe