விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் முன்னதாக வெளியான ‘தீமா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு முன்னதாக ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்பு என்னுடையது என இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்து விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாக அறிக்கை வெளியிட்டார். அது மட்டுமின்றி இந்த தலைப்பு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எல்.ஐ.சி நிறுவனமும் படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்பு படத்தின் பெயர் ‘எல்.ஐ.கே’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு படத்தில் நடித்துவரும் எஸ்.ஜே. சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் பின்பு கதாநாயகி க்ரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி போகவாய்ப்புள்ளதாக சமீபத்தி தகவல் வெளியானது.
இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகவுள்ளதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது தள்ளி போகவுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியதாவது, முன்னோட்டத்தின் புதிய தேதி ரஜினி நடித்த கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியானதும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூலி படத்தின் விழா நாளை(02.08.2025) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The #FirstPunch of #LoveInsuranceKompany will now land a little later due to coolie audio & trailer launch.
— Seven Screen Studio (@7screenstudio) August 1, 2025
#VigneshShivan@pradeeponelife@IamKrithiShetty@iam_SJSuryah@anirudhofficial#RaviVarman@iYogiBabu@Gourayy@PradeepERagav@muthurajthangvl@PraveenRaja_Off… pic.twitter.com/7n5Jcq5yOA