losliya with dad

பிக்பாஸ் சீஸன் 3 போட்டியின் மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இவர் தற்போது ஹர்பஜன் சிங்குடன் ஃப்ரண்ட்ஷிப் என்னும் தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இதுமட்டுமல்லாமல், அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது. சமீபத்தில் கனாடாவை சேர்ந்த தொழிலதிபருடன் அவருக்கு திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியானது. அந்த செய்திக்கு மறுப்பும் தெரிவித்தார் லாஸ்லியா.

Advertisment

இந்நிலையில் கனடாவில் பணிபுரிந்து வரும் லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால் லாஸ்லியாவுக்கு பலரும் சமூக வலைதளத்தில் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

லாஸ்லியாவின் தந்தை உடல் கனடாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வர இரண்டு வாரங்கள் ஆகும் என்று கனடா அரசு தெரிவித்துள்ளாதாக சொல்லப்படுகிறது. இதனிடையே லாஸ்லியாவின் தந்தையின் மரணம் குறித்து சிலர் சமூக வலைதளத்தில் பலவிதமாக வதந்தி பரப்பி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் லாஸ்லியாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். அதில், கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருடைய மரணம் இயற்கையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக உடலை எடுத்து வர இரண்டு வார காலம் எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.