tharshan

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பை தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணனுக்கு வழங்கியுள்ளார்.

Advertisment

தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்க உள்ளார். மேலும், நடிகர் யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

Advertisment

இப்படத்தின் பணிகள் இன்று (28.01.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளன. படப்பூஜையின்போது, தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.