Advertisment

வடசென்னை பட நடிகருடன் இணைந்த லாஸ்லியா

Losliya Mariyanesan act with Hari Krishnan annapurani movie

இயக்குநர் லயோனல் ஜோசுவா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'அண்ணபூர்ணி'. ஹரி கிருஷ்ணன் வடசென்னை, மெட்ராஸ், கபாலி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். 'அண்ணபூர்ணி'படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை ஹரி பாஸ்கர் மற்றும் நேதாஜி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Advertisment

த்ரில்லர் ட்ராமா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பணிகளை முடித்து திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

vadachennai losliya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe