கடந்த நான்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்ஷி மற்றும் லோஸ்லியா இடையேயான முக்கோண காதல் விவகாரம் அனல் பறந்தது. சாக்ஷி மீது லோஸ்லியா குற்றஞ்சாட்ட, பதிலுக்கு லோஸ்லியா மீது சாக்ஷி குற்றஞ்சாட்ட, கவின் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.மேலும், மூவரில் ஒருவர் மாற்றி ஒருவராக அனைத்து போட்டியாளர்கள் முன்பு மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தனர். அப்போது பேசிய லோஸ்ஸியா சாக்ஷிக்கு நடந்த அநியாயத்திற்கு நான் தான் காரணம். அதனால் உங்கள் அனைவரது முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அபிராமியை தவிர என்னிடம் யாரும் பேச வேண்டாம். நானும் யாருடனும் பேச மாட்டேன் என்று தெரிவித்தார்.

சாண்டி, சாக்ஷி, ஷெரீன் போன்றோர் லோஸ்லியாவின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.முக்கோண காதல் விவகாரத்தில் அனைவரும் சாக்ஷியை பிரச்னையாக பார்த்து வந்தனர். ஆனால் லோஸ்லியாவின் இந்த நடவடிக்கையால் அவர் தன்னைத் தானே பிரச்னையாக அறிவித்துக் கொண்டார். நேற்று ரேஷ்மா வெளியேறிய நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டில் எலிமனேஷனுக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. அதற்காக வெளிவந்துள்ள ப்ரோமோவில் சரவணன், சாக்ஷி, ஷெரீன் உள்ளிட்ட பலரும் லோஸ்லியாவை நாமினேட் செய்கின்றனர். காதல் விவகாரத்தில் அவரின் செயல்பாட்டில் தங்களுக்கு அதிருப்தி உள்ளதாக, அவரை நாமினேட் செய்வதற்கு காரணம் என்று அவர்கள் மூவரும் தெரிவித்தார்கள்.