losliya

இலங்கைத்தமிழரான லாஸ்லியா, பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியில் போட்டியிட்டு பிரபலமடைந்தார். இதற்கு முன்பாக இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஊடகம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், பட வாய்ப்புகளைத்தேடி வந்த லாஸ்லியாவுக்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் நடிக்கும் ’பிரெண்ட்ஷிப்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், தமிழ் மொழி படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கும் கனாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

Advertisment

இந்நிலையில், இந்தத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் லாஸ்லியா. “இப்போதைக்குத்திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் வதந்தி தான்” என்று தெரிவித்துள்ளார்.