'Looking forward' - Jandi Rhodes Surprise for Surya

Advertisment

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடத்தும் '2டி என்டர்டென்மெண்ட்' தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஓ மை டாக்'. இப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜயகுமார், அருண் விஜய், வினய், மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். குழந்தைகளுக்கும் நாய்க்கும் இடையே உள்ள உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பிரபல தென் ஆப்ரிக்காவின் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "செல்லப்பிராணி விரும்பியாக இருக்கும் நான், 'ஓ மை டாக்' படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்று சூர்யாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதனை ரீடிவிட் செய்த சூர்யா " மிக்க நன்றி. உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் நான். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கும் மற்றும் உங்களின் மகளான இந்தியா ரோட்ஸிற்கும் பிடிக்கும்" என குறிப்பிட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான ஜாண்டி ரோட்ஸின் இந்த பதிவு சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.