Lokesh wrotestory for rathnakumar next movie

மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார் அடுத்ததாக ஆடை, குலுகுலு ஆகிய படங்களைஇயக்கியிருந்தார். இதனிடையே தன்னுடைய நெருங்கிய நண்பரானலோகேஷ் கனகராஜின் படங்களுக்கு அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி வருகிறார். லோகேஷின்முதல் படமான 'மாநகரம்' படத்திலிருந்து விரைவில் தொடங்கவுள்ள 'தளபதி 67' படம் வரைக்கும் ரத்னகுமார் திரைக்கதைஎழுதும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.

Advertisment

இந்நிலையில் ரத்னகுமார் ராகவா லாரன்ஸைவைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான கதையை இயக்குநர் லோகேஷ் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ராவான கதைக்களத்தை படத்தை இயக்கி வரும் லோகேஷ் தனது வழக்கமான ஜானரில் இருந்து வேறு மாதிரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment