இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கரோனா!

Lokesh Kanagaraj

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர், தற்போது கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ள ‘விக்ரம்’ படத்திற்கான முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அனைவருக்கும் வணக்கம். எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் பணிக்கு திரும்புவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe