மாநகரம்', 'கைதி' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அப்படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்' இயக்குனராக உயர்ந்தார் லோகேஷ். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜயை வைத்து அவர் இயக்கிய 'மாஸ்டர்' படம், வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த செப்டெம்பர் மாதம் 16 -ஆம் தேதி வெளியானது. விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 அன்று, கமல்- லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2 நிமிடங்களுக்கு டீஸர் போல டைட்டில் லுக் டீஸர் வெளியாகியுள்ளது. கமல் முழுக்க முழுக்க மாஸாகத்தோன்றும் காட்சிகள், ஷாட்கள் இடம்பெற்றிருக்கிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/NXSigiaZ0W0.jpg?itok=aRLUGka4","video_url":" Video (Responsive, autoplaying)."]}
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)