lokesh kanagaraj, yogi babu thanked pawan kalyan

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் தன்னை பாராட்டியதற்காக நன்றி தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்கள் வார்த்தைகளை கேட்க உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது பவன்கல்யாண் சார். என் வேலை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் யோகி பாபுவும் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் பவன் கல்யாண் யோகிபாபுவை பாராட்டிய நிலையில் அந்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த யோகி பாபு, “ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாருக்கு நன்றி. உங்கள் மதிப்பு மிக்க வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன” என குறிப்பிட்டுள்ளார். யோகி பாபு சூர்யாவின் கங்குவா, தெலுங்கில் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.