Advertisment

lokesh kanagaraj wishes vijay sethupathi maharaja film

நடிகர் விஜய் சேதுபதி 'குரங்கு பொம்மை' இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகும் இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதன்படி 'மகாராஜா' எனப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ் மற்றும் நட்டி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.

விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் நித்திலன், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தொகுப்பாளருக்குஇயக்குநர் லோகேஷ் கனகராஜ்வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், "நிச்சயமாக மகாராஜா பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்', 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது ஏற்கனவே படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், லோகேஷின் வாழ்த்து இன்னும் அதை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.