மாநகரம் படம் மூலம் பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்பட வெளியீட்டை முன்னிட்டு அவர் இன்று பத்திரைகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இப்படம் குறித்து பேசும்போது...

Advertisment

lk

''கைதி' முடியும் போதே எனது அடுத்த படமான தளபதி64 பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன். கார்த்தியை மையப்படுத்தி தான் இந்த மொத்த படமும் நகரும். அதனால் இப்படத்திற்கு ஹீரோயின் தேவைப்படவில்லை. ஆனால் இப்படத்தில் பெண் கதாப்பாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். மேலும் மொத்தப்படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் ஹீரோயினுக்கான இடம் படத்தில் இல்லை அவ்வளவு தான்.

Advertisment

vds

இந்தப்படம் ஹாலிவுட்டில் வந்த டை ஹார்ட் படத்தின் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லலாம். என் அடுத்த படம் பற்றி மற்றொரு தருணத்தில் பேசுகிறேன் அது இப்போது தான் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. விஜய் சார் மட்டுமல்ல இன்னும் தயாரிப்பாளரே 'கைதி' படம் பார்க்கவில்லை. இப்பொழுது தான் படத்தின் வேலைகளே முடிந்தது. என்இனிமேல் தான் எல்லோருக்கும் பார்ப்பார்கள். தீபாவளிக்கு இரண்டு படங்கள் வருகிறது. “பிகில்”, “கைதி” இரண்டுமே பாருங்கள். இரண்டுமே ஜெயிக்க வேண்டும்'' என்றார்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Jo-6chUrT3U.jpg?itok=wkn95S6M","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment