Advertisment

புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்

lokesh kanagaraj turn as producer

Advertisment

2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் கைதி மற்றும் விஜய் நடிப்பில் மாஸ்டர் படங்கள் வெளியானது. இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய 'விக்ரம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து 'லியோ' படத்தை இயக்கியிருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் 12 நாட்களில் 540 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்போது ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ள நிலையில், அதற்கான கதை எழுதும் பணிகளில் ஏடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு ‘ஜி-ஸ்குவாட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் படம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.அதோடு முதல் படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

Advertisment

lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe