lokesh kanagaraj talk about thalapathy 67 film

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து கைதி படத்தின்சீக்குவலாகஅண்மையில் வெளியான விக்ரம் படமும் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் LCU (Lokesh Cinematic Universe) என்ற பெயரில் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களைஇயக்கவுள்ளதாக அறிவித்தார்.

Advertisment

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி தளபதி 67 படம் பக்கா ஆக்சன் திரைப்படம். ஆனால் அது LCU-வா அல்லது தனித்த படமா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார். ஒரு வேலை தளபதி 67 படம் LCU வாக இருந்தால் விஜய்யுடன் கமல், சூர்யா, கார்த்தி போன்ற மல்டி ஸ்டார்கள் ஒரே திரையில் தோன்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

Advertisment

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.