/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/175_5.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர்நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்த இடம் கமல் சார் எனக்கு கொடுத்தது. ராஜ் கமல் நிறுவனத்தில் படம் இயக்குவது என்பதைத் தாண்டி, நான் சின்ன வயதிலேயே பார்த்து வளர்ந்த நடிகருக்கு படம் இயக்குகிறேன் எனும்போது அதைச் சாதாரணமாக பண்ணிவிட முடியாது. உதயநிதி சார் சொன்ன மாதிரி லாக்டவுனுக்குத்தான் நன்றி சொல்லனும். கதை எழுதுவதற்கு நிறைய டைம் கிடைத்தது.
படத்தில் கமல் சார் முழுச்சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. படத்தின் ப்ரொமோஷனுக்காக யூட்யூப் சேனலுக்கு நான் பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கும்போது கமல் சார் மாநிலம் மாநிலமாகச் சென்று ப்ரொமோஷன் செய்து கொண்டிருந்தார். நான் ஒரு ஸ்டூடியோவில் பேட்டியை முடித்துவிட்டு அடுத்த ஸ்டூடியோ செல்வதற்குள் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு கமல் சார்சென்றுவிடுவார். நாங்கள் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் தூங்காமல் இருந்தபோது ப்ரொமோஷன் வேலைகளில் கமல் சார் தூங்காமல் இருந்தார்.
சினிமாவிற்கு சின்ஸியராக இருக்க வேண்டும் என்பதுதான் கமல் சாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது. படம் ரிலீஸாகி ஹிட்டானதும் எனக்கு கால் செய்து அரைமணி நேரம் பேசினார். படம் சக்சஸாகிவிட்டது, உன் வேலை முடிந்துவிட்டது. உடனே ஆபிஸிற்குச் சென்று அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பி, பிரேக் எதுவும் எடுக்காத என்றார். அதை ஒரு பெரிய பாடமாக எடுத்துக்கொள்கிறேன். இந்த பட வெற்றி கூடுதல் பொறுப்பைக் கொடுத்துள்ளது. அந்தப் பொறுப்புடன் அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்க இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)