/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/75_28.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “விக்ரம் படம் எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். நான் கமல் சாரின் எவ்வளவு பெரிய ரசிகன் என்பது உங்களுக்குத் தெரியும். அவரைப் பார்த்துதான் சினிமா கற்றுக்கொண்டேன். என்னுடைய நான்காவது படத்திலேயே அவரை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்த படக்குழுவினரையும் மேடையேற்ற ஆசை. ஆனால், ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் எல்லோரும் பிஸியாக வேலை பார்த்துவருகின்றனர். எங்கேயோ இருந்த என்னை இந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியதற்காகவும், இந்தப் பட வாய்ப்பை வழங்கியதற்காகவும் கமல் சாருக்கு நன்றி. எங்களுக்குத் திருப்தியான படமாக விக்ரம் வந்துள்ளது. மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)