/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20_95.jpg)
ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படம் சிறை வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. காமெடி கலந்த கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஆர்.ஜே பாலாஜி இந்தப் படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேடையில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படத்தில் ஒர்க் பண்ண பெரும்பாலனோர் என்னுடைய நண்பர்கள். ட்ரைலர் ரொம்ப நல்லாயிருந்துச்சு. ஆறு மாசம் முன்னாடி படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தேன். அப்போது நடிகர் ஆர்.ஜே பாலாஜி உருவாகிவிட்டார் என்றேன். கைதி 2-விலும் ஜெயில் சீன்கள் இருக்கிறது. இந்தப் படத்தில்ஆர்ஜே பாலாஜி என்ன பண்ணியிருக்கான்னு தெரில. படம் பார்த்துவிட்டு அதற்கு ஏத்த மாதிரி கைதி 2வை மாத்தனும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)