lokesh kanagaraj speech at leo success meet

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது லோகேஷ் கனகராஜ் படக்குழுவினருக்கும் அவரது உதவி இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Advertisment

பின்பு, "வெற்றிமாறனை நடிக்க வைக்க ஆசை. 2 படங்களுக்கு அவரைவில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். விரைவில் அவரை அப்படி மாற்றுவேன் என நினைக்கிறேன்" என்றார். மேலும் என்ன கிஃப்ட் எதிர்பார்ப்பதாக தொகுப்பாளினிகேட்ட கேள்விக்கு, "ஹெலிகாப்டருக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டு இருப்பதாக சொன்னார்கள்" எனக் கிண்டலாக பதிலளித்தார்.