Advertisment

எதற்காக ரஜினிக்கு 5821 நம்பர்? - லோகேஷ் பகிர்ந்த நெகிழ்ச்சி காரணம்

104

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 

Advertisment

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட், சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ், “வெளியில் இருந்து பார்த்தால் இது ஒரு படம். ஆனால் இந்த இரண்டு வருஷம் ரஜினியுடன் பழகியதில் இருந்து நான் கற்றுக் கொண்டது, அமைதி மற்றும் நிதானம். அவருடைய முதல் படம் ஆகஸ்ட் மாதம் 1975ல் வெளியானது. 50 வருஷம் கழித்து, அவரது 50வது வருட திரைபயணத்தில் அதே ஆகஸ்ட் மாதம் என்னுடைய படம் வெளியாவதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார். 

Advertisment

அப்போது அவரிடம் படப்பிடிப்பில் ரஜினியுடன் மறக்க முடியாத அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிறைய நினைவுகள் ரஜினி சாருடன் இருக்கிறது அதில் மனதுக்கு நெருக்கமான ஒன்று இருக்கிறது. ரஜினி சாரின் பழைய படங்களில் கூலியாக நடித்த கேரக்டர்களில் பெரும்பாலும் 777, 786 போன்ற எண் தான் இருக்கும். கூலி படத்தில் 5821 என்ற நம்பரை வைத்திருந்தேன். ஒரு நாள் படப்பிடிப்பில் என்னை கூப்பிட்டு நம்பருக்கு என்ன காரணம் எனக் கேட்டார். அதற்கு எங்க அப்போவோட கூலி நம்பர் என சொன்னேன். உங்க அப்பா என்ன வேலை செய்தார் என கேட்டார். பஸ் கண்டகர் என சொன்னேன். இதை ஏன் இவ்வளவு நாள் சொல்லவில்லை என்றார். என்றைக்காவது ஒரு நாள் நீங்க கேப்பீங்க, அப்போது இதை சொன்னால் அது நல்ல நினைவாக இருக்கும், அதனால் தான்சொல்லவில்லை என்றேன். அதனால் இதை பார்த்தால் எங்க அப்பா சந்தோஷப்படுவார் என நினைக்கிறேன்” என்றார்.    

Coolie Actor Rajinikanth lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe