lokesh kanagaraj shared thalaivar 171 update

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத்தொடர்ந்து ரஜினியின் 171 வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்காலிகமாக ‘தலைவர் 171’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் பணியாற்றவுள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படம் குறித்து சிறிய அப்டேட் ஒன்றை காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ‘அவள் பெயர் ரஜ்னி’ ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “அடுத்த வாரத்திலிருந்து எழுத உள்ளேன். அடுத்த ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்” என கூறினார்.

Advertisment