/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Eey2mtwU4AA2mqV.jpg)
கடந்த 2013ஆம் ஆண்டு கதிர், ஓவியா நடிப்பில் வெளியாக 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். இவரின் முதல் படமான மதயானைக் கூட்டம் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படமான 'இராவண கோட்டம்' படத்தை இயக்கியுள்ளார்.
கண்ணன் ரவி தயாரிப்பில்,சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது. மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை ஐந்து மணிக்கு போஸ்டரை வெளியிடுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us