lokesh kanagaraj praised Madras Matinee movie

Advertisment

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. கே.சி. பாலசாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க கடந்த 6ஆம் தேதி வெளியாகியது.

மிடில் கிளாஸ் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்ட வீடியோவில், “படம் ரொம்ப சிறப்பா இருந்தது. எல்லாருமே சூப்பரா நடிச்சிருந்தாங்க. காளி வெங்கட் செம்மையா நடிச்சிருக்கார். அவருடைய படங்கள் எல்லாமே நல்லாருக்கும். கூலி படத்தில் தான் அவருடன் ஒர்க் பண்ண முடிந்தது.

படத்தில் நடித்த எல்லா நடிகர்களும் நல்லா நடிச்சிருந்தாங்க. மிடில் கிளாஸ் லைஃபை வாழ்ந்த அனைவரும் இந்த படத்தை ஈஸியாக கனெக்ட் பண்ணிக்க முடியும். படத்தை தியேட்டரில் பார்த்து சப்போர்ட் பன்னுங்க. அப்படி செய்தால் இது மாதிரி இன்னும் நிறைய ஃபீல் குட் படங்கள் வர வழிவகுக்கும்” என்றார்.