Advertisment

"எமோஷனலான எதார்த்தமான படம்" - லோகேஷ் கனகராஜ் பாராட்டு

lokesh kanagaraj praised good night movie

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில்நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் நைட்'. இப்படத்தைஎம்.ஆர்.பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். .

Advertisment

இப்படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தூங்கும்போது குறட்டை விடும் ஒரு மனிதனை பற்றி இக்கதை விவரிக்கிறது. காதல் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவை பாராட்டிவருகின்றனர். இதையடுத்து படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்துபேசியிருந்தது படக்குழு.

Advertisment

இந்நிலையில் இப்படத்துக்குஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குட் நைட் படம் பார்த்தேன். இப்படம் கலகலப்பாக, எமோஷனலாக மற்றும் யதார்த்தமாகவும்இருந்தது. நன்றாக ரசித்து பார்த்தேன். மணிகண்டன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நேர்த்தியான நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

manikandan lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe