kamal lokesh project

'மாநகரம்' மற்றும் 'கைதி' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவ்விரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜயைவைத்து 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கிவருகிறார். அப்பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'என்னுடைய அடுத்த படம் குறித்தான தகவல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும்' என்று பதிவிட்டிருந்தார்.

Advertisment

அவர் ரஜினியை வைத்து படம் இயக்க இருக்கிறார், தெலுங்கில் பிரபல நடிகர் ஒருவரை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்று முன்னர் தகவல்கள் பரவிய நிலையில், லோகேஷ் கனகராஜின் இந்த ட்விட் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது. தற்போது அது குறித்தான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Advertisment

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அந்தப் படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தினை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தினை 2021-ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்குத் திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.