h vinoth

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தையொட்டி வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும், வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து இயக்கவுள்ள 'விக்ரம்' படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

நடிகர் அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும்நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் எச்.வினோத் இடையே திடீர் சந்திப்பு நடந்துள்ளது. இருவரும் சந்தித்துக்கொண்டபோது எடுத்தப் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு வினோத் அண்ணாவுடன் மகிழ்ச்சியான தருணம்." என்று குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.