Advertisment

உறியடி இயக்குநருடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி

lokesh kanagaraj first production movie update

Advertisment

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பைதொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர்.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் ‘ஜி-ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நேற்று தெரிவித்தார். அப்போது முதல் படம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதோடு முதல் படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்‘ஜி-ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உறியடி படம் முலம் பிரபலமான விஜய்குமார் நடிக்கும் படத்தை தயரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உறியடி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அப்பாஸ் இந்த படத்தை இயக்குகிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.சென்னையில் படப்படிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த சூழலில் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.

lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe