இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இதனிடையே‘ஜி-ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். உறியடி விஜய்குமார் நடித்த ‘ஃபைட் கிளப்’ படத்தை தன்னுடைய நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். இப்படம் வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அதன் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இது குறித்து தற்போது அவரது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில், “நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். வேறு எந்த சமூக ஊடக கணக்குகளும் என்னிடம் இல்லை அல்லது பயன்படுத்தவில்லை. தயவு செய்து மற்ற போலி கணக்குகளை புறக்கணிக்கவும், பின்தொடரவும் வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.