அரசியலுக்கு பிரேக் விடுகிறாரா கமல்..?

மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான 'கைதி' படம் மாபெரும் வெற்றிபெற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு சினிமாவில் தனி இடத்தை பெற்றுத்தந்துள்ளது.

kama

அதன் விளைவு இவர் தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் காற்று மாசுக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அரசியலுக்கு நடுவே கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 மற்றும் தலைவன் இருக்கிறான் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ACTOR KAMAL HASSHAN kamalhaasan
இதையும் படியுங்கள்
Subscribe