லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.'பேட்ட' புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lokesh kanagaraj.jpg)
இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்படம் திட்டமிட்டப்படி ரிலீஸாகவில்லை.
மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் மாதம் 9ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அதிகாரப்பூர்வமாக தளர்த்தப்பட்ட பின்னர் மாஸ்டர் படம் எப்போது ரிலீஸாகும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து பல்வேறு வதந்திகள் லோகேஷ்கனகராஜின் பேரில் பரப்பப்பட்டது.இதற்கு விளக்கம் தெரிவிக்கும்வகையில், "நான் டிவிட்டர் மட்டும்தான்பயன்படுத்துகிறேன்.பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நான் இல்லை அதெல்லாம் பேக்ஐடி"என்று பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)