Lokesh Kanagaraj

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல்ஹாசனை நாயகனாக வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

நடிகர் கமல், தற்போது தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்தன.

Advertisment

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய இவ்வருட பிறந்தநாளை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், லிங்குசாமி, கௌதம் மேனன், சசி, வசந்தபாலன் ஆகியோருடன் இணைந்து கொண்டாடியது தெரியவந்துள்ளது. அக்கொண்டாட்ட நிகழ்வின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், 'இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.