Advertisment

"பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்" இயக்குநரின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்

lokesh kanagaraj ask Nelson Dilipkumar for beast update

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய லோகேஷ் கனகராஜ், 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் நேற்று(14.3.2022)தனது பிறந்தநாளை கொண்டாடினர். திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

அந்தவகையில் விஜய்யை வைத்து 'பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள லோகேஷ் கனகராஜ் "பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்" என்று அப்டேட் கேட்டுள்ளார். இதைப்பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இருவரின் பதிவையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment

vikram movie lokesh kanagaraj actor vijay Beast
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe