lokesh kanagaraj answered to students question

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்த லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கானபணிகளில் லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4daf523a-a297-46a3-8f58-162124ee8a1e" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_25.jpg" />

Advertisment

இதனிடையே திரைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், கல்லூரி நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கோவைமாநகர காவல்துறை மற்றும்ரோட்டரி டெக்ஸ்சிட்டி இணைந்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொன்டுள்ளார். அதில் மாணவர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது மாணவர் ஒருவர், "கமலவச்சு படம் பண்ணிட்டீங்க...ரஜினிக்கு தளபதி மாறி படம் பண்ணுவேன்னு சொன்னீங்க. அஜித்துக்கு எந்த மாதிரியான படம் பண்ணுவீங்க?" எனக் கேட்டார். அதற்கு லோகேஷ் கனகராஜ், "தீனா படம் போல்" எனப் பதிலளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.