Advertisment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லியோ படக்குழு

lokesh kanagaraj and leo team in tirupathi

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

.

ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சைகளில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதே வேளையில், சென்னை ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் எவ்வாறு வெளியிடலாம் என விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம், சென்சார் செய்யப்படாத டிரெய்லரை வெளியிட்ட சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி தான்...' பாடலில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றிய 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு ஊதியம் வந்துசேரவில்லை எனக் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது அவர்களுக்கும், நடனக்கலைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக ஃபெப்சி தலைவர் செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் நடனக்கலைஞர்களின் புகார்களை மறுத்திருந்தார். இதையடுத்து படத்தின் மூன்றாவது பாடலான 'அன்பெனும்...' பாடல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போது கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் லியோ படம் ரிலீஸிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் வசனகர்த்தா ரத்னகுமார் உள்ளிட்ட படத்தின் உதவி இயக்குநர்கள் திருப்பதி சென்றுள்ளனர். திருப்பதி மலையேறும் போது கோவிந்தா கோவிந்தா என பாதையாத்திரையாக சென்றனர். இன்று ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

actor vijay director rathna kumar lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe