
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து கைதி 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டில் ஆமிர் கானுடன் ஒரு படம் பண்ணவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்னதாக ஸ்ருதிஹாசன் இசையமைத்து நடித்த ‘இனிமேல்’ ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பின்பு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது. ஆனால் பின்பு அவர் நடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.