kamal

Advertisment

லோகேஷ் கனகராஜ் அடுத்து கமல்ஹாசனை வைத்து இயக்கப்போகும் படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் அடுத்து கமல்ஹாசனை வைத்து இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இன்னும் மாஸ்டர் படம் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கிவிட்டார் லோகேஷ்.

இந்நிலையில் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் படக்குழு அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கும் வகையில், தலைப்பு வெளியிடுவதையே ஒரு டீஸர் போல உருவாக்கி வெளியிட்டனர், இது பலருக்கும் பிடித்திருந்தது. கடந்த சில வருடங்களாக சினிமாவில் பெரிய ஹிட் கமல் கொடுக்காததால், இந்த படம் மாபெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பிக்கையில் கமல் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த டீஸர் உருவாக்கம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், “படத்தில் தலைப்பு குறித்த அறிவிப்பை எப்படி வெளியிடுவது என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, வெறும் போஸ்டராக வெளியிடாமல் ஆக்கபூர்வமாக வேறு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தோம். பிறகு இதற்காக ஒரு தனி டீஸரே ஷூட் செய்யலாம் என்று கமல் சாரிடம் சொன்னேன்.

கரோனா அச்சுறுத்தலால் அப்போது மிகவும் தயக்கத்துடனே சொன்னேன். நான் இந்த யோசனையைச் சொன்னதுமே கமல் சார் மிகவும் மகிழ்ச்சியடைந்து, தன்னுடைய மற்ற பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்து நடித்துக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அவரது பிறந்தநாளுக்கு அவருக்கு என்ன அன்பளிப்பு கொடுப்பது என்று எனக்குதெரியவில்லை. இதைவிடச் சிறந்த அன்பளிப்பையும் எங்களால் கொடுத்திருக்க முடியுமா என்று எங்களுக்கு தெரியவில்லை" என்றார்.