/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/26_71.jpg)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்த லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் எனப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கோவையில் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த லோகேஷ் கனகராஜ்,மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்பு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அரசியல் குறித்து நிறைய தெரிஞ்சவங்க அதைப் பற்றிப் பேசலாம். எனக்கு அவ்ளோவா தெரியாது. ஒரு விஷயம் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் கருத்து சொல்வது மிகவும் ஆபத்தான ஒன்று. அதனால் எனக்கு அதை பற்றி தெரியாது.
தனிப்பட்ட முறையில் அவரை ரொம்ப பிடிக்கும். நமக்கு தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார். அவ்ளோ நல்ல மனிதர். அவர் கண்ணு காமித்தால் மூன்றாவது முறையாக இணையவும் தயார். அரசியலைப் பற்றி போதிய அறிவு இல்லை. அதனால் தான் அரசியல் படங்கள் எடுப்பதில்லை. மொத்தம் 10 படம் எடுப்பேன். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவேன். லியோவின் இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)