Lokesh Kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'கைதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மாஸ்டர் படத்தின் காட்சிகள் நேற்று இரவு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இணையத்தில் லீக்கான காட்சிகளை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். இது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாஸ்டர் படத்தை உங்களிடம் கொண்ட வந்துசேர்ப்பதில் ஒன்றரை வருட நீண்ட போராட்டம் உள்ளது. நீங்கள் தியேட்டரில் படத்தைப் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறோம். படத்தின் லீக்கான காட்சிகள் ஏதாவது உங்களுக்கு வந்தால் தயவு செய்து பகிரவேண்டாம். அனைவருக்கும் நன்றி. இன்னும் ஒரே ஒரு நாள்தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment