லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் - லோகேஷ் கனகராஜ் பதில்

lokesh kanagaraj about leo mixed reviews

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் 7 நாளில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது. இதையடுத்து படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்குப் பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக கார்த்தியின் ஜப்பான் ட்ரைலர் மற்றும் கார்த்தி 25 நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் முன்பு பேசிய அவர், "தியேட்டர் வரவேற்பு குறித்து பார்த்து வந்தேன். மக்கள் ரொம்ப பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு இருப்பதாக கலவையான விமர்சனங்களும் வந்தது. அதையும் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார் .

மேலும் பேசிய அவர், "விஜய் சார் ஹேப்பியாக இருக்கார். கேரளாவிற்கு சென்றபோது எனக்கு சின்ன அடிபட்டது தொடர்பாக தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். இப்போது அடுத்த படத்தில் அவர் பிசியாக இருக்கிறார்" என்றார்.

actor vijay lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe