Advertisment

நடிகர் அவதாரம் குறித்து மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

lokesh kanagaraj about inimel album and his acting debut

Advertisment

கமலின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இப்பாடலுக்கு கமல் வரிகள் எழுதியிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தின் டீசர் கடந்த 21ஆம் தேதி வெளியானது. முழு பாடல் வருகின்ற 25ஆம் தேதி வெளியாகிறது.

அதனால் புரோமோஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை இருவரும் ஸ்டேடியத்திற்கு சென்று பார்த்தனர். இந்த நிலையில் இருவரும் நேர்காணல் கொடுத்துள்ள வீடியோவை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் லோகேஷ் கனகராஜ் நடிகராக மாறியது குறித்து பேசுகையில், “பாடலின் கான்செப்டை ஸ்ருதி சொன்னாங்க. நான் நடிக்கனும்னு இதுவரைக்கும் ட்ரை பண்ணுனதில்லை, நினைச்சு கூட பார்த்ததில்லை. இதை ஏன் சேலஞ்ச்சா எடுத்து பண்ணக்கூடாது என... அப்படியும் நான் யோசிச்சதில்லை.

பாட்டின் ஸ்கிரிப்ட் புக் கொடுத்தாங்க. அதை படிச்சிட்டு டைரக்டர் துவாரக்கை சந்தித்தேன். அப்புரம் மொத்த டீமையும் மீட் பண்னேன். கடைசி வரைக்கும் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி தோணிகிட்டே இருந்துச்சு. ஷூட் போறதுக்கு முன்னாடியும் நான் தைரியமாக இல்லை. என்ன பண்ண போறேன்னு தெரியாமல் தான் இருந்தேன். ஸ்ருதி, துவாரக் மற்றும் மொத்த டீமையும் நம்பினேன். அவுங்களோடு நேரம் ஒதுக்கினேன். இது எல்லாம் சேர்ந்து, யாரும் காரி துப்பாத அளவிற்கு ஏதாவது பண்ணிருக்கேன் என நினைக்கிறேன்” என்றார்.

shruthi hassan lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe