லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஏ சான்றிதழுடன் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் முன்னோட்ட விழா, கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நாகர்ஜூனா, லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடத்தில் படம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் தங்களது பதில்கலை தெரிவித்தனர். 

Advertisment

அந்த வகையில் லோகேஷ் கனகராஜிடம், இந்த படம் சைன்ஸ் ஃபிக்சன் ஜானரா? அல்லது டைம் ட்ராவல் ஜானரா? என ரசிகர்கள் யூகிக்கப்படுவதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “இது போல் எழுதுவதை நான் படிப்பேன். ஆனால் கூலி எதைப் பற்றிய படம் என ரசிகர்கள் உண்மையிலேயே பார்க்கும் போதும் ஆச்சரியப்படுவார்கள். அதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்றார்.