மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’. இப்படத்தை துல்கர் சல்மானின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. டாமினிக் அருண் இயக்கியுள்ள இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், கடந்த 29ஆம் தேதி தமிழ், உள்ளிட்ட இன்னும் சில மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. குறுகிய நாட்களிலே ரூ.100 கோடி வரை வசூலித்தது. இதன் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும் இப்படம்தான் இந்தியாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படம் தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.202 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் நான்காவது மலையாள படமாக ரூ.200 கோடி கிளப்பில் இப்படம் இணைந்துள்ளது. இதற்கு முன்பு மஞ்சும்மல் பாய்ஸ், எம்புரான், துடரும் ஆகிய படங்கள் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/10/332-2025-09-10-15-30-30.jpg)