/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lockdown_4.jpg)
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் தமிழ் சினிமா துறை மிகவும் மோசமாக முடங்கியுள்ளது. இன்றும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை, திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த லாக்டவுன் சமயத்தில் குறும்படங்கள் மற்றும் யூ-ட்யூப் வீடியோக்களின் ஆதிக்கம் வேறு ஒரு தளத்திற்கு அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய பிரபலங்கள் கூட தனது இல்லத்திலேயே இருந்து குறும்படத்தில் நடித்து வெளியிட்டனர். இயக்குனர் கௌதம் மேனன் சிம்புவையும், த்ரிஷாவை வீடியோ காலின் மூலம் இயக்கி ‘ஒரு கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை வெளியிட்டார்.
வெள்ளித்திரை இருக்கிறதுஎன்பதையே மறக்கடிக்கும் அளவில் குறும்படங்கள், யூ-ட்யூப் தொடர்கள், ஆவணப்படங்கள், ஓடிடி படங்களின் பெறுக்கம் அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் லாக்டவுனை மையமாக வைத்து அதே பெயரில் சீரியல் நட்சத்திரங்களான குமரன், சுனித்தா உள்ளிட்டோர் நடிப்பில் குறும்படம் ஒன்று வெளியாகிறது. பில்லா இயக்கும் இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை இயக்குனர் ரவிக்குமார் வெளியிடுகிறார் என்று குறும்படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)