style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது புதுமுக இயக்குனர் பிரபு இயக்கிவரும் ‘எல்.கே.ஜி’ படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். நிகழ்கால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி. அந்த போஸ்டரில் அவரைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இடம் பெற்றிருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே.பாலாஜியின் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கின்றது. மேலும் அந்த போஸ்டரில் 'இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம்' என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்டரிலேயே இலவசங்களை ஆர்.ஜே.பாலாஜி விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.