lip injury caused by selfie; Sunny Leone is tormented

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வடிவுடையான் இயக்கத்தில் உருவாக இருந்த 'வீரமாதேவி' படத்தில் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இப்படம் முடங்கப்பட்டது.

Advertisment

இதனை தொடர்ந்து வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் ஆகியோர் தயாரிப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. சன்னி லியோன் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் நல்ல நிகழ்வுகளை எல்லாம் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படமாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு இரத்தம் வருது ஆனால் கவலையில்லை என்று உதட்டை காட்டி பதிவிட்டிருந்தார். வீடியோ உள்ளே செல்போன் எடுக்க முயற்சித்த போது போன் தவறி உதட்டில் விழுந்து காயமானதை சொல்லி இருக்கிறார்.

Advertisment