நேற்று 19ஆம் தேதி இந்தியாவில் ‘தி லயன் கிங்’ படம் வெளியாகிறது. லைவ் ஆக்ஷன் அனிமேஷன் படமாக வெளியாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ஹிந்தி மொழியில் ஷாருக்கானும், அவரது மகனும் டப்பிங் பேசுகிறார்கள். அதுபோல தமிழிலும் முன்னணி நடிகர்களான சித்தார்த், அரவிந்த்சாமி, சிங்கம்புலி, ரோபோ சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகர்கள் டப்பிங் பேசுகிறார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
கடந்த வாரத்திற்கு முன்பே சீனாவில் இப்படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்துள்ளது. நேற்று இந்தியாவில் இப்படம் வெளியான நிலையில் தமிழ் டப்பிங் மிக அருமையாக இருந்ததாக தெரிவித்து வருகின்றனர்.
சீனாவில் ஒரு வாரத்திற்கு முன்பே ரிலீஸான இப்படம் சுமார் 70 மில்லியன் டாலர்கள் வசூலை கடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 20 மில்லியன் டாலர்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருடத்தில் அவெஞ்சர்ஸ் இந்தியாவில் வசூல் சாதனை படைத்ததை அடுத்து தி லயன் கிங் படம் இங்கு வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல நேற்று இந்தியா முழுவதும் சுமார் 12 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.