Advertisment

டைட்டில் சொன்ன இயக்குநர் சந்தோஷிற்கு ஒரு லட்சம் பரிசளித்த லிங்குசாமி - ’ தி வாரியர்’ டைட்டிலின் சுவாரசிய பின்னணி

Lingusamy

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்வில் ’தி வாரியர்’ படத்திற்கான டைட்டில் உருவான விதம் குறித்து பேசிய லிங்குசாமி, “ஷூட்டிங் போவதற்கு முன்பாக டைட்டில் முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொருத்தராக ஒரு டைட்டில் சொன்னார்கள். எதுவுமே செட்டாகவில்லை. பப்ளிசிட்டி வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்பதால் சீக்கிரம் டைட்டில் சொல்லுங்கள் என்று தயாரிப்பாளரும் கேட்டார். அதன் பிறகு, டைட்டில் சொல்பவர்களுக்கு ஒரு லட்சம்னு சொல்லலாமா என்று கேட்டார். பின் அதை அறிவித்ததும் உதவி இயக்குநர்கள் வரிசையாக டைட்டில் சொன்னார்கள். ’மனசெல்லாம்’ பட இயக்குநர் சந்தோஷ் என்னுடன் இருந்தார். அவரிடம் டைட்டில் சொல்லி இது எப்படி இருக்கிறது என்று கேட்டால் வேண்டாம் என்று சொல்வார். வரிசையாக ஒவ்வொரு டைட்டிலையும் நிராகரித்தார். நான் நூறு டைட்டில் கார்டு எழுதியவன் என்ற முறையில் சொல்கிறேன், இதுவெல்லாம் ஒத்துவராது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஒருநாள், நான் ஒரு டைட்டில் சொல்லலாமா என்று சந்தோஷ் கேட்டார். நான் சரி சொல்லுங்கள் என்றதும் வாரியர் என்றார். இந்தப் படத்திற்கு அதைவிட பொருத்தமான டைட்டில் வைக்க முடியாது. அதனால் ஏற்கனவே சொன்னபடி ஒரு லட்ச ரூபாயை இந்த விழாவில் வைத்து சந்தோஷிற்கு வழங்குகிறேன்" என்றார்.

Advertisment

மனசெல்லாம் படத்தை இயக்கிய சந்தோஷ், தேர்ந்த ஓவியரும் புகைப்படக் கலைஞரும் என்பது குறிப்பிடத்தக்கது.

directorlingusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe