Advertisment

அடுத்த படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கிய லிங்குசாமி!

lingusamy

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சண்டக்கோழி 2'. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னும், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்தபடம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. அவ்வப்போது ரசிகர்களும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் பணிகளை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளார், இயக்குநர் லிங்குசாமி. இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார். பிற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

directorlingusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe